பச்சரிசி உருண்டை - பாட்டி காலத்துத் தின்பண்டம்



அம்மா பசிக்குதும்மான்னு பிள்ளைகள் சொல்லிட்டாப்போதும். உடனே பிஸ்கெட் சாப்பிடுறியா, சிப்ஸ் தரட்டுமா, சாக்லெட் வேணுமான்னுதான் கேட்கிறோம் இப்ப. ஆனா அந்தக் காலத்தில், அவசரமா ஆரோக்கியமா அப்பப்ப தயாரிச்ச தின்பண்டங்களைக் கொடுத்தாங்க குழந்தைகளுக்கு.

அப்படிப்பட்ட ஒண்ணுதான் பச்சரிசி உருண்டை. பச்சரிசியை, அதிலும் தீட்டாத சிவப்பு நிறமுள்ள அரிசி இருந்தால் இன்னமும் சத்து அதிகம். பச்சரிசியைப் பத்தே நிமிஷம் ஊற வச்சு, அதோட தேங்காயையும், அச்சுவெல்லத்தை அல்லது சீனியையும் கலந்து, உரல்ல பதம்மா இடிச்சு, பக்குவமா உருட்டிக் குடுப்பாங்க பாருங்க...அத்தனை ருசியா இருக்கும்.

அதே பழைய ருசியை, உங்க குழந்தைகளும் கொஞ்சம் அனுபவிக்க இந்தத் தின்பண்டத்தைச் செய்து கொடுங்க...

தேவையான பொருட்கள்...

பச்சரிசி - 1 1/2 கப்
தேங்காய் - 1/2 மூடி
சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - 1/2 கப்

செய்முறை

*அரிசியைப் பத்து நிமிஷம் ஊறவச்சு, தண்ணீரை வடிய விடுங்க.

*தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வச்சுக்கங்க.

*மிக்ஸியில் அரிசியைப்போட்டு, அரிசி ஓரளவு குருணையாக மாறினபிறகு, அதில் தேங்காய் துண்டுகளையும்போட்டு ஓட விடுங்க.

*ஓரளவுக்கு அரிசியும் தேங்காயும் அரைபட்டதும் அத்தோடு சர்க்கரையைப்போட்டு விட்டுவிட்டு அரைத்து எடுங்க.

*நைசா அரைக்கவேண்டியதில்லை. ஓரளவு கொரகொரப்பா இருக்கலாம்.

*உருண்டை பிடிச்சு குழந்தைகள் கையில கொடுத்தா, நிமிஷத்துல பறந்துடும்.

                                    ************************

கருத்துகள்

  1. நான் சாப்பிட்டுள்ளேன்... பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மாவிளக்கு மாவு போல இருக்கே!
    நிறைய சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளுமா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!