தேங்காய் தக்காளிச் சட்னி




தக்காளியில்லாம சமையலா? சான்சே இல்லன்னு சொல்ற அளவுக்கு, தக்காளி நம்ம வீடுகளில் பிரபலம். தக்காளியில், புற்றுநோயைத் தவிர்க்க உதவும் லைகோபீன் எனும் ஆன்டிஆக்ஸிடெண்ட் இருக்கிறது. இது மட்டுமில்லாம, விட்டமின் ஏ, விட்டமின் சி இரண்டும்கூட தக்காளியில் நிறைய இருக்கிறது. 

அதனால, தக்காளியை உணவில் அதிகம் சேர்ப்பது, நல்லது. அதுவும் சமைக்காமல் சாப்பிட்டா அது ரொம்பவும் நல்லது.
இந்தச் சட்னியில், நாம தக்காளியை வதக்காம அப்படியே சேர்ப்பதுதான் சிறப்பு.

தேவையான பொருட்கள்...

தேங்காய் - அரை மூடி

பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 5 அல்லது ஆறு

பூண்டு - 1 பல்

பழுத்த தக்காளி - 1

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க...

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி 

கறிவேப்பிலை - 1 இணுக்கு

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை

தேங்காயுடன், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து, மிக்சியில் ஒரு நிமிடம் ஓடவிடுங்க. 

அப்புறம் தண்ணீர் சேர்த்து நல்லா அரைச்சுக்கோங்க. 

கடைசியில், நறுக்கிய தக்காளியோடு, ஒரு பூண்டுப் பல்லையும் சேர்த்து, சில வினாடிகள் சுத்தவிட்டு எடுங்க. 

அழகான நிறமும் மணமுமான தேங்காய் தக்காளிச் சட்னி தயார்.

கடைசியில் கடுகு. உளுத்தம்பருப்பு தாளித்து, இட்லி தோசையுடன் பரிமாறுங்க.

                                                  ***********

கருத்துகள்

  1. இது நாங்க பண்ணுவோம் அடிக்கடி

    பதிலளிநீக்கு
  2. நானும்,தேங்காய் தக்காளி சேர்த்து செய்வேன்,ஆனால் சிறிய மாறுதலுடன்.

    பதிலளிநீக்கு
  3. //LK said...

    இது நாங்க பண்ணுவோம் அடிக்கடி//

    வாங்க கார்த்திக், நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //asiya omar said...

    நானும்,தேங்காய் தக்காளி சேர்த்து செய்வேன்,ஆனால் சிறிய மாறுதலுடன்.//

    மாறுதல் என்னன்னு உங்க ப்ளாக்ல பாத்துத் தெரிஞ்சுக்கிறேன் :)

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!