பால் பழம்


இது வாழைப்பழமும் தேங்காய்ப் பாலும் சேர்த்துச் செய்யப்படும் ருசியான பானம். வயிற்றுப்புண், உடல் சூடு குறைய மிகவும் உதவக்கூடியது.

தேவையான பொருட்கள்

தேங்காய்ப்பால் - 2 கப்

பொடிசெய்த வெல்லம் - 1/4 கப்

வாழைப்பழம் - 1

ஏலக்காய் - 1

செய்முறை

பழத்தை மெல்லிய வில்லைகளாக நறுக்கிவச்சுக்கோங்க.

தேங்காய்ப் பாலுடன் வெல்லத்தைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வச்சுக்கோங்க.

உயரமான க்ளாஸில் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் பழத் துண்டுகளைப்போட்டு, ஸ்பூனுடன் பரிமாறுங்க.

குளிரவைத்துப் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.

விருந்தினரோ, வீட்டு உறுப்பினர்களோ, நிச்சயம் அசந்துபோவாங்க இதன் சுவையில்.

பி.கு: ஏலக்காய்ப்பொடி கலந்துக்கலாம். ஆனா, தேங்காய்ப்பாலோட இயல்பான வாசனையை அது குறைத்துவிடும்.

                                                 *******




கருத்துகள்

  1. இது ஒன்றும் புதினமானதல்ல!அந்தக்காலத்தில்,ஏன் இப்போதும் கூட என்று நினைக்கிறேன்.வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி சாப்பாடு சாப்பிட்ட பின் தாய்மார்கள்(யாழ்ப்பாணத்து)இதே போல் செய்வதுண்டு!சோற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!