கார்த்திகை ஓலைக்கொழுக்கட்டை


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கே உரிய பலகாரங்களில் சிறப்பான ஒன்று இது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்தன்று அநேகமாக எங்கள் வீடுகளில் இரண்டுவகைக் கொழுக்கட்டை செய்வோம். ஒன்று பிடிகொழுக்கட்டை, இன்னொன்று வேறெங்கும் கிடைக்கவே கிடைக்காத ஓலைக்கொழுக்கட்டை.

கார்த்திகையன்று கிடைக்குமோ கிடைக்காதோ என்று, முந்திய நாளே ஓலை வாங்கிவைத்துவிடுவோம். அதைச் சுத்தம்செய்து, அரையடி நீளத்துக்கு வெட்டி வைத்துக்கொள்வோம். அதில் தயாரித்த மாவை வைத்து பனையோலை நாரினால் கட்டி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து,வேகவைத்து எடுப்பார்கள். இந்தக் கொழுக்கட்டையின் மணம் மிகவும் அருமையாக இருக்கும்.

பனையோலைக் கொழுக்கட்டைக்குத் தேவையான பொருட்கள்...

பச்சரிசி மாவு - 3 கப்

சர்க்கரை அல்லது வெல்லத்தூள் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

வறுத்த பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடித்தது - 5

சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

பச்சரிசி மாவில் சர்க்கரை, தேங்காய், பாசிப்பருப்பு, பொடித்துவைத்த ஏலம், சுக்கு, சிட்டிகை உப்பு எல்லாவற்றையும் கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைஞ்சுவச்சுக்கணும்.

பிசைந்த மாவில் ஒரு உருண்டை எடுத்து, அதை சுத்தம் செய்துவைத்த பனையோலையில் நீளமாகவைத்து, மூடி நாரினால் கட்டணும்.

இந்த ஓலைக் கொழுக்கட்டை மாவை, இட்டிலிப் பாத்திரத்திற்குள் வைத்து, பத்து நிமிஷம் வேகவிட்டு எடுக்கணும். 

அருமையான ஓலைக்கொழுக்கட்டை தயார்.

பனைவெல்லம் சேர்த்துச்செய்தால் மணம் இன்னும் தூக்கலாக இருக்கும்.

                                                 ******

கருத்துகள்

  1. எங்க ஆச்சி செய்வாங்களே இதை சூப்பரா ....

    பதிலளிநீக்கு
  2. வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!