புடலங்காய் பொரியல்




மிக மிக விரைவாகச் செய்யக்கூடிய மிகச் சுவையான புடலங்காய் பொரியல் செய்முறை!

தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க,

எண்ணெய் - 3 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு -1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :-

சிறிய புடலங்காய் ஒன்றை நடுவில் நறுக்கி சுத்தம்செய்து, குறுக்குவாட்டில் நீளநீளமாக நறுக்கிக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, அதில் நறுக்கிய புடலங்காய்த் துண்டுகளைப் போடுங்க.

தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கிவிட்டு, வாணலியை மூடி, சிறுதீயில் வேகவிடுங்க. (தண்ணீர் சேர்க்கவேண்டாம். புடலங்காயிலிருக்கும் தண்ணீரே போதுமானது)

இடையிடையே கிளறிவிட்டு, காய் வெந்ததும், துருவிய தேங்காயைத் தூவி, மேலும் ஒருநிமிடம் வதக்கி இறக்குங்க.

சுவையான, புடலங்காய்பொரியல் தயார்.

இது பத்தே நிமிஷத்தில் செய்துவிடக்கூடிய மிக எளிதான கூட்டு. வத்தக்குழம்பு,புளிக்குழம்பு இவற்றோடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

                                                       ***

கருத்துகள்

  1. நலமா?நீண்ட நாட்கள் பார்க்கலை.புடலங்காய் பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கார்த்திக் :)

    நன்றி சாரல்!

    நன்றி ஆசியா...நான் நலம், நீங்களும் நலம்தானே? :)

    பதிலளிநீக்கு
  3. இண்ட்லியில் வாக்களித்துப் பிரபலமாக்கிய அனைவருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!