காய்கறி மசாலா சப்பாத்தி

சட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது.



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கோப்பை
முட்டைக்கோஸ் - 200 கிராம்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட்டைத் பொடியாக நறுக்கி/துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகத்தைத் தாளித்து, அதன்பின், துருவிய காய்கறிகளையும் நறுக்கிய கறிவேப்பிலையையும் போட்டு, பச்சை வாசனைபோக வதக்கவும்.

கோதுமை மாவுடன், வதக்கிய காய்கறிக்கலவை, மாசாலாப்பொடிகள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்குத் திரட்டிக்கொள்ளவும்.

 சிறிதளவு எண்ணெய் விட்டு, சப்பாத்திகளாகச் சுட்டெடுக்கவும்.

இந்தச் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது. காய்கறி சாப்பிடாத குழந்தைகள்கூடக் கடகடவென்று சாப்பிட்டுவிடுவார்கள். 

முக்கியமாக, முட்டைக்கோஸ் வாசனை கொஞ்சம்கூடத் தெரியாது.

குறிப்பு: அவசியமென்றால், தயிரில் சீரகம், மிளகு பொடித்துப்போட்டு, உப்பு சேர்த்துத் தொட்டுக்கொள்ளலாம்.

                                                        *******



கருத்துகள்