காலிஃபிளவர் பொரியல்



மிக எளிதாகச் செய்கிற பொரியல் வகையில் ஒன்று இது. சாம்பார் மற்றும் தயிர் சாதத்திற்குப் பொருத்தமாக விரைவாகச் செய்யக்கூடிய செய்முறை இது.

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர்  - 1
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை 

காலிஃபிளவரை சிறு சிறு பூக்களாக உதிர்த்து, கொதிக்கிற உப்பு நீரில் 3 நிமிடங்கள் போட்டு வடிகட்டவும்.

வாணலியில், எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

அத்துடன், வடித்துவைத்த காலிஃபிளவரைச் சேர்த்து வதக்கி, சில நிமிடங்கள் மூடியிட்டுச் சிறு தீயில் வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத்தேவையில்லை.

பூ பாதியளவு வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி, இன்னும் சில நிமிடங்கள் வேகவிடவும்.

மசாலா வாசனை நீங்கி, காலிஃபிளவர் நன்றாக வெந்ததும், உப்பு சரி பார்த்து இறக்கவும்.

சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

                                               *******


கருத்துகள்

  1. வணக்கம்
    குறித்து கொண்டேன்..... இனி செய்யலாம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றிகள் ரூபன்!

    நன்றிகள் அபயா அருணா!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சுந்தரா, வாழ்க வளமுடன். என் தளத்தில் உங்களுக்கு ஒரு விருது அன்புடன் பெற்றுக் கொள்ள் வேண்டுகிறேன்.
    http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!