சிவப்பரிசி கொழுக்கட்டை | பிடி கொழுக்கட்டை செய்முறை




சம்பா சிவப்பு அரிசி புட்டு மாவில் செய்த கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்

சிவப்பரிசி புட்டு மாவு - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

சர்க்கரை - 1/4 கப்

சுக்குப்பொடி - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி

நெய் -1 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி


செய்முறை

அரிசி மாவுடன் சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.

அத்துடன் தண்ணீர் சேர்த்து உதிரியாக, அதே சமயம் கையால் பிடித்தால் பிடிக்கவரும் அளவுக்கு நீர் சேர்த்துப்
பிசைந்து கொள்ளவும்.

அத்துடன் துருவிய தேங்காய், சுக்கு, ஏலக்காய்ப்பொடி மற்றும் கால் கப் சர்க்கரை அல்லது பொடி செய்த வெல்லம்  சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

பாத்திரத்தில் நீரூற்றிக் கொதித்ததும் கொழுக்கட்டைகளை எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான சிவப்பரிசி கொழுக்கட்டைகள் தயார்!

                                                      ******

கருத்துகள்

  1. இந்த கொழுகட்டை மிகவும் பிடிக்கும்.
    தண்ணீர் போதுமா? வெந்நீர் வேண்டாமா மாவு பிசைய?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!