தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்


கடற்கரை, திருவிழாக்கூட்டங்களில் நாம் வாங்கி ரசித்துச் சாப்பிட்ட தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை வீட்டில் எப்படிச் செய்யலாம்னு இப்போ நாம் பார்க்கலாம்.

முழுமையான வீடியோ செய்முறை 👇👇👇


தேவையான பொருட்கள்

வெள்ளைப் பட்டாணி - 1 கப் 
எலுமிச்சை - 1/2 மூடி
மாங்காய் - 1/2 கப் சீவியது

அரைக்க

தேங்காய் - 1துண்டு
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க

கடுகு -1/2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 10
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

பட்டாணியை ஆறிலிருந்து எட்டுமணி நேரம் ஊறவைத்து, உப்புப் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

தேங்காயை இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன் அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.

மசாலா வதங்கியதும், வேகவைத்து வடிகட்டிய பட்டாணியைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிடவும். உப்பு சரிபார்க்கவும்.

இறுதியாக அடுப்பை அணைத்தபின், அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, சீவிய மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

                                                     *******



கருத்துகள்