மணலில் வறுத்தது போன்ற மணமான சுவையான நிலக்கடலையை வீட்டிலேயே வறுக்கும் எளிமையான முறை!

செய்முறை

தேவையான பொருட்கள்
நிலக்கடலை - 1 கப்
தூள் உப்பு - 3/4 கப்
இந்த முறையில் கடலை வறுக்க அடி கனமான வாணலியும், பகடலையைப் பிரித்தெடுக்க இதுபோல ஒரு கரண்டியும் தேவை.
அடி கனமான வாணலியில் தூள் உப்பைச் சேர்க்கவும்.
உப்பு சிறிது சூடானதும், அதில் கடலையைச் சேர்த்து, மிதமான தீயில் வறுக்கவும்.
சில நிமிடங்களில் கடலையின் மேல் தோல் வெடித்துப் பிரிய ஆரம்பிக்கும். வெடிக்கிற சத்தம் கேட்க ஆரம்பித்தபின், மேலும் ஒரு நிமிடம் வறுத்ததும் கடலையின் மணம் வர ஆரம்பிக்கும். இப்போது அடுப்பை அணைத்துவிடலாம்.
அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு சல்லடைக் கரண்டியால் கடலையை உப்பை விட்டுப் பிரித்து எடுக்கவும்.
உப்பில் அதிக நேரம் இருந்தால் கடலை உப்பின் சூட்டில் கருகிவிடலாம்.
மணமான, லேசான உப்புச் சுவை உடைய வறுத்த கடலை தயார்!
*******
கருத்துகள்
கருத்துரையிடுக
திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!