உருளைக்கிழங்கு புளிக்குழம்பு | புளிக்குழம்பு செய்முறை

ரொம்ப ரொம்ப சுலபமான ஒரு புளிக்குழம்பு செய்முறை. வீட்ல வேற எந்தக் காய்கறியும் இல்லாதப்போ, உருளைக்கிழங்கை மட்டும் வச்சு நாம இந்தக் குழம்பு பண்ணலாம். இந்தக் குழம்புக்கு, தக்காளி வெங்காயம் எதுவும் தேவையில்லை.



தேவையான பொருட்கள் 

உருளைக்கிழங்கு - 2 சிறியது 
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை

*வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். 

*கடுகு வெடித்த பிறகு, வெட்டி வச்சிருக்கிற உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

*கிழங்கு முக்கால் பதம் வெந்த பிறகு, அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன், எடுத்து வைத்திருக்கிற மஞ்சள்பொடி, வத்தல் பொடி மற்றும் மல்லிப் பொடியைச் சேர்க்கவும்.

*தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

*மசாலாப் பொடிகளின் பச்சை வாசனை போன பிறகு, சாம்பார்ப் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். 

*கடைசியாக, ஒரு கப் தேங்காய்ப்பாலைக் கலந்து கொதிவரவும் இறக்கவும்.

*இறக்குவதற்குமுன் சிறிய துண்டு வெல்லம் அல்லது அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

                                                        *******

கருத்துகள்