முட்டைக்கோஸ் கூட்டு - குக்கர் செய்முறை

சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கு ஏற்ற மசாலாப்பொடிகள் சேர்த்த முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு...எளிதான குக்கர் செய்முறையில். 

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 300 கிராம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கடலைப்பருப்பு - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சாம்பார்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இணுக்கு

பெருங்காயம் சிறிதளவு


செய்முறை

கடலைப் பருப்பைக் கழுவி, 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

முட்டைக்கோஸ், வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.

வணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும்

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய முட்டைக்கோஸைச் சேர்க்கவும்.

அதனுடன், ஊற வைத்த கடலைப் பருப்பு, மஞ்சள்த்தூள், சாம்பார்ப்பொடி ஆகியவற்றையும் சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்துவிடவும்.

தேவைப்பட்டால் 1/4 கப் தேங்காய்த் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.

குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும்.

சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார். இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

******

கருத்துகள்