கோதுமை தோசை | உடனடி தோசை செய்முறை

இரவு உணவாக அன்றாடம் சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு ஒரு சுவையான மாற்று உணவு செய்முறை. கோதுமை மாவுடன் தயிர் சேர்த்து தோசை தயாரிக்கும்போது, தோசை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1 1/2 டேபிள்ஸ்பூன்

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வதக்கிச் சேர்க்க

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 இணுக்கு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி


செய்முறை

கோதுமை மாவுடன், அரிசி மாவைச் சேர்த்து அத்துடன் 2 மேஜைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய கலவையை, கரைத்துவைத்த மாவில் சேர்த்து, மெலிதான தோசைகளாக ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான அதே சமயம் ஆரோக்கியமான டயட் கோதுமை தோசை தயார்!

                                                      ******

கருத்துகள்