பாவக்காய் சிப்ஸ் | பாகற்காய் சிப்ஸ்

மாலை நேரத் தேநீருடன் சாப்பிட மொறுமொறு பாவக்காய் சிப்ஸ்! 

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1

எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி

கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி

கார்ன் ஃப்ளார் - 1 மேஜைக்கரண்டி

அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி

சாம்பார்ப் பொடி - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு



செய்முறை

பாகற்காயை நடுவில் கீறி விதைகளை நீக்கிவிட்டு மெலிதான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

நறுக்கிய பாகற்காயுடன் எலுமிச்சை சாறு, தேவையான உப்பு கலந்து நன்கு பிரட்டிவிடவும்.

அத்துடன் கடலைமாவு, கார்ன் ஃப்ளார், அரிசிமாவு மூன்றையும் கலக்கவும்.

ஒரு தேக்கரண்டி சாம்பார்ப் பொடி, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும். தேவைப்பட்டால் அரைத் தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும்.

பாகற்காய்த் துண்டுகளை மூடி பத்து நிமிடம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் சூடாக்கி, பாகற்காய்த் துண்டுகளை உதிர்த்துவிட்டு, மிதமான தீயில் மொறுமொறுப்பாக ஆகும்வரை பொரித்தெடுக்கவும்.

சுவையான பாகற்காய் சிப்ஸ் தயார்!

இதனைத் தேநீருடனோ அல்லது சாதத்துடனோ கூடச் சாப்பிடலாம்.

                                                          ******

கருத்துகள்