சம்பா சிவப்பரிசிப் புட்டு | Red Rice Puttu in Tamil


சம்பா சிவப்பரிசிப் புட்டு... சிவப்பு நிறமான சம்பா பச்சரிசியைக் கடைகள்ல பார்த்திருப்பீங்க... அதை வாங்கிட்டு வந்து, அரை மணி நேரம் ஊறவச்சு வடிகட்டி, நிழலில் உலர்த்தி, மெஷின்ல கொடுத்து மாவாக்கி, அதனை வறுத்தெடுத்துச் செய்த புட்டு மாவில் செய்த அருமையான புட்டு இது. 

வீட்டில் புட்டு மாவு தயாரிக்க இயலவில்லையென்றால், கடையில் கிடைக்கும் சிவப்பரிசிப் புட்டு மாவையும் பயன்படுத்தி இந்தப் புட்டு செய்யலாம்.

புட்டு செய்யத் தேவையான பொருட்கள்

சிவப்பரிசிப் புட்டு மாவு - 1 கப்

சீனி - 1/4 கப்

தேங்காய்த் துருவல் - 5 மேஜைக்கரண்டி

சுக்குப்பொடி - 1/4 தேக்கரண்டி

நெய் - 2 - 3 தேக்கரண்டி

உப்பு - 1/ 4 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் புட்டு மாவை எடுத்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலந்துவிடவும்.

அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கையால் பிடித்து, அதனை உதிர்த்துவிட்டால் உதிருகிற அளவுக்கு ஈரப்பதம் வருமளவுக்குப் பிசைந்துகொள்ளவும். ( மேலும் தெளிவான விளக்கத்திற்கு மேலுள்ள வீடியோவைப் பார்க்கலாம்)

பிசைந்த மாவுடன், சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

கால் கப் சீனியையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு, ஒரு வெள்ளைத்துணியில் அந்த மாவைக் கொட்டி, சிறு மூட்டையாக்கி, ஆவியில் வைத்து, எட்டு முதல் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

வெந்தபின் புட்டு மாவைத் துணியிலிருந்து பாத்திரத்திற்கு மாற்றி அத்துடன், உருக்கிய நெய் 2 அல்லது 3 தேக்கரண்டியைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.

சுவையான, மணமான சம்பா சிவப்பரிசிப் புட்டு தயார். இந்தப் புட்டை வாழைப்பழம் அல்லது பால் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

                                                        ******


கருத்துகள்