திருநெல்வேலி சீவல் | ரிப்பன் பக்கோடா


திருநெல்வேலி சீவல் அல்லது ரிப்பன் பக்கோடா...இது தீபாவளி சமயத்தில் வீட்டில் செய்தும், மற்ற சமயங்களில் கடையில் வாங்கியும் சாப்பிடுகிற ஒரு தின்பண்டம். இதனைத் தயாரிப்பது மிகவும் சுலபம்.

திருநெல்வேலி சீவலுக்குத் தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 3 மேஜைக்கரண்டி

வத்தல் தூள் - 1/2 தேக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 சிட்டிகை

சூடாக்கிய எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பிசைந்தெடுக்கத் தண்ணீர் 

பொரித்தெடுக்க எண்ணெய்

செய்முறை

கடலை மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, அத்துடன் தேவையான உப்பு, வத்தல் தூள், ஓமம், பெருங்காயம் சேர்த்துக் கலந்துவிடவும்.

அத்துடன் இரண்டு மேஜைக்கரண்டி அளவு எண்ணெயைச் சூடாக்கிச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

பிசைந்த மாவை அச்சில் போட்டு, நேராகச் சூடான எண்ணெயில் சுற்றி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கரகர மொறுமொறு சீவல் தயார்.

                                                   *******


கருத்துகள்