சப்போட்டா மில்க் ஷேக் | Chikoo Milkshake Recipe in Tamil



பழங்கள் சாப்பிடாத குழந்தைகளையும் விரும்பிக் கேட்டு வாங்கிக் குடிக்கவைக்கும் சுவையான, சத்தான சப்போட்டா மில்க் ஷேக்... 
சப்போட்டா மில்க் ஷேக் செய்யத் தேவையான பொருட்கள்

சப்போட்டாப் பழங்கள் - 6

நாட்டுச் சர்க்கரை அல்லது சீனி - 2 தேக்கரண்டி

பால் - 250 மில்லி

செய்முறை

சப்போட்டாப் பழங்களை இரண்டாகக் கீறி, விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை மட்டும் ஒரு கரண்டியால் எடுத்துவைக்கவும்.

மிக்ஸி ஜாரில். பழத்தின் சதைப்பகுதி, நாட்டுச் சர்க்கரை, பால் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நன்றாக அடித்து எடுக்கவும்.

தேவைப்பட்டால் இனிப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

சுவையான சப்போட்டா மில்க் ஷேக் தயார்!

                                                     ******

கருத்துகள்