பட்டர் பாப்கார்ன் செய்வது எப்படி? | Popcorn Recipe in Tamil

குழந்தைகள் பெரியவர்கள் எல்லாருக்குமே பாப்கார்ன் பிடிக்கும். அதுவும் உருக்கிய வெண்ணெய் மணத்துடன் வீட்டிலேயே மூன்று நிமிடத்தில் செய்தால் அது ரொம்பவே பிடிக்கும். இந்த பட்டர் பாப்கார்ன் செய்வது மிகவும் சுலபம். 



பட்டர் பாப்கார்ன் செய்யத் தேவையான பொருட்கள்

மக்காச் சோளம் ( கார்ன்) - 1/4 கப்

தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

குக்கர் பாத்திரத்தில் அல்லது அடி கனமான ஒரு பாத்திரத்தில், மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்

எண்ணெய் சூடானதும் கால் கப் மக்காச்சோளத்தைப் போட்டு எண்ணெயுடன் கலந்துவிடவும்.

பாத்திரத்தை மூடவும். இரண்டிலிருந்து மூன்று நிமிடத்தில் மக்காச்சோளம் வெடித்துப் பொரிய ஆரம்பிக்கும்.

வெடிக்கும் சத்தம் அடங்கி முப்பது வினாடிகள் கழித்து மூடியத் திறக்கவும்.

கடைசியாக, உருக்கிய வெண்ணெய், உப்பு சேர்த்துக் குலுக்கிவிட, சுவையான உடனடி பட்டர் பாப்கார்ன் தயார்!


                                              ******

கருத்துகள்