காலிஃபிளவர் குருமா | Cauliflower Kurma in Tamil

இடியப்பம், ஆப்பத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கு ஏற்ற காலிஃபிளவர் தேங்காய்ப்பால் குருமா. இது சப்பாத்தி,புலாவ் மற்றும் வெஜ் பிரியாணிக்கும் அருமையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்
காலிபிளவர் - 1 (400 கிராம்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

அரைக்க

தக்காளி-1
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5



செய்முறை

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்

காலிஃப்ளவரை நறுக்கி, உப்புச் சேர்த்த கொதி நீரில் சில நிமிடங்கள் போட்டு எடுத்து வைக்கவும்.

ஒரு தக்காளியுடன் முந்திரிப்பருப்பு, சோம்பு/ பெருஞ்சீரகம் கலந்து அரைத்தெடுக்கவும்.

இஞ்சி பூண்டை இடித்துத் தயாராக வைக்கவும்.

ஒரு கப் தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், தட்டி வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நன்றாக மசியும்வரை வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், வெந்நீரில் போட்டு எடுத்த காலிஃப்ளவரைச் சேர்த்து, அரைக் கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

காலிஃப்ளவர் முக்கால் பதம் வெந்த பிறகு, அரைத்து வைத்த தக்காளி சோம்பு, முந்திரிப் பருப்புக் கலவையைச் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்தபின், உப்பு சரி பார்க்கவும். மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

கடைசியாகக் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

******

கருத்துகள்