கிராமத்து முறை உருளைக்கிழங்கு குருமா | Village Potato Kurma in Tamil

வழக்கமாகச் சேர்க்கும் இஞ்சி பூண்டு, கரம் மசாலா இல்லாமல் மிக எளிமையான முறையில் தயாரிக்கப்படும் மிகச் சுவையான கிராமத்துமுறை உருளைக்கிழங்கு குருமா... சாதத்துடனும் சப்பாத்தி பூரியுடனும் சேர்த்துச் சாப்பிட ஏற்றது.


தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2

வறுத்து அரைக்க...

அரிசி - 1/2 தேக்கரண்டி
சோம்பு / பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
&
தேங்காய் - 1/2 கப் ( வறுக்கத் தேவையில்லை)

தாளிக்க...

எண்ணெய் - 3 தேக்கரண்டி
சோம்பு / பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை

* உருளைக்கிழங்கை வேகவைத்து, நறுக்கி வைக்கவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டுத்     தாளிக்கவும்.

* சோம்பு பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய்,   கறிவேப்பிலையை உப்பு சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து, சிறிது நேரம்     மூடிவைத்து வேகவிடவும். 

* தக்காளி நன்கு குழைந்தபின், மஞ்சள் தூள் மற்றும் அரைத்த   மசாலாவைச் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

* கலவை கொதித்து, பச்சை வாசனை போனபின்,   வேகவைத்த  உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்க்கவும்.

* உப்பு சரிபார்த்தபின், மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள்   மிதமான தீயில் கொதிக்கவிட்டு, கொத்துமல்லி தூவி   இறக்கவும்.

* அருமையான, கிராமத்து முறை உருளைக்கிழங்கு குருமா   தயார்!

                                                           ******

கருத்துகள்