கறி பிரட்டல் | மட்டன் சுக்கா செய்முறை


காரசாரமான மட்டன் சுக்கா அல்லது கறி பிரட்டல் செய்முறை...

தேவையான பொருட்கள் 

மட்டன் - 400 கிராம் 
பெரிய வெங்காயம் - 3  
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு 
பூண்டு - 4 பல் 
கறிவேப்பிலை - 2 இணுக்கு 
எலுமிச்சைச்சாறு - சில துளிகள்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வத்தல் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க 

மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருஞ்சீரகம்/சோம்பு - 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருஞ்சீரகம்/சோம்பு - 1/4 டீஸ்பூன் 
பட்டை - ஒரு அங்குலத் துண்டு 
ஏலக்காய் - 2 
கிராம்பு - 3

தாளிக்க 

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருஞ்சீரகம்/சோம்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை

கறியை நான்கைந்து முறை கழுவி, சுத்தம்செய்து வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.

வறுத்து அரைக்கவேண்டிய பொருட்களை, மிதமான தீயில் வறுத்து, கொரகொரப்பாகப் பொடி செய்துவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அத்துடன் நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து  நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போக வதக்கிய பிறகு, மட்டனைச் சேர்த்து வதக்கவும். அத்துடன், அரைக் கப் தண்ணீர் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், வத்தல் தூள், மல்லித்தூள் சேர்க்கவும். 

மசாலாப் பொடிகளைச் சேர்த்துக் கலந்துவிட்டு, மூன்றிலிருந்து ஐந்து விசில் பிரஷர் குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.

வெந்த கறியுடன், கடைசியாக வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து, நன்கு சுருள வதக்கி இறக்கவும். 

அருமையான கறி பிரட்டல் அல்லது மட்டன் சுக்கா தயார்!

                                                    ******

கருத்துகள்