மணமான மீன் வறுவல் செய்ய எளிமையான டிப்ஸ் | Fish Fry Tips in Tamil

மணமான மசாலாக்களை அளவாகச் சேர்த்துச் செய்யும்போது மீன் உணவுகளின் சுவையே தனிதான்.

இங்கே சொல்லியிருக்கும் சில குறிப்புகளைப் பயன்படுத்தும்போது, சிறிய வித்தியாசத்தில் அதிக சுவையைப் பெறலாம்.


1. வழக்கமான மீன் வறுவலுக்கு, வத்தல்தூள், மஞ்சள் தூளுடன் கூடுதலாக ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியும் சேர்த்துக் கலந்து பாருங்க. மறுமுறை சாம்பார்ப்பொடி சேர்க்காமல் மீன் வறுவல் செய்யமாட்டீங்க.

2. மிளகு வாசனையுடன் மொறுமொறு மீன் வறுவல் செய்யணுமா? அரை டீஸ்பூன் மிளகுத்தூளுடன், அரை டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து, வழக்கமான மசாலா தடவிய மீனின்மேல் தூவிப் பொரித்து எடுங்க. மணமான பெப்பர் ஃபிஷ் ஃப்ரை தயார்.

3. மீன் வறுவலுக்கான மசாலாவுடன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையும், சிட்டிகை அளவு பெருங்காயமும் சேர்த்துக் கலந்து மீன் வறுவல் செய்து பாருங்க. உங்க வீட்டு மீன் வறுவல் ஊருக்கே மணக்கும்.

4. மீன் பொரிக்கும் மசாலாவில், சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலப்பது வழக்கம். எலுமிச்சை இல்லையென்றால், ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்துப் பொரித்தாலும் சுவை கூடுதலாக இருக்கும்.

5. கடைசியாக, நிறத்துக்கென்று கலர் சேர்க்காதீங்க. அது கண்ணுக்குக் கவர்ச்சி, ஆனால், உடம்புக்குக் கேடு. அவசியமென்றால் விதைகளை நீக்கிவிட்டு, சிவப்பு மிளகாய்களை அரைத்துச் சேர்க்கலாம்.

மேலும் பல மீன் சமையல் குறிப்புகள் இங்கே... 

                                                         ******

கருத்துகள்