கம்பு ரொட்டி | Kambu Roti in Tamil



அதிக அளவு கால்ஷியம் சத்தும், அதற்கு அடுத்த அளவு இரும்புச் சத்தும் உடைய கம்பு, கண் பார்வைக்கு உரிய பீட்டா கரோட்டின் எனும் உயிர்ச்சத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. அத்தகைய கம்பு மாவில், காலை உணவாகவும் இரவு உணவாகவும் உண்ணக்கூடிய சத்தான கம்பு ரொட்டி செய்முறை

தேவையான பொருட்கள் 

கம்பு மாவு - 1 கப் 
கோதுமை மாவு - 1/4 கப் 
மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப் (விருப்பப்பட்டால் சேர்க்கவும்)
உப்பு - தேவையான அளவு 


செய்முறை 

கம்பு மாவு, கோதுமை மாவுடன் தேவையான உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, மிருதுவான சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். 


ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில், எண்ணெய் தடவிக் கொண்டு, அதில் பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக மாவை வைத்து, விரல்களால் ரொட்டியாகத் தட்டிக்கொள்ளவும். விரல்களை நனைத்துக்கொண்டு தட்டினால், ரொட்டி தட்டுவது சுலபமாக இருக்கும். மிகவும் மெலிதாகத் தட்ட வேண்டாம். 


தட்டிய ரொட்டிகளை, சூடான தோசைக்கல்லில், இருபுறமும் சிறிது எண்ணெய் சேர்த்து, சுட்டு எடுக்கவும். 

முழுமையான வீடியோ செய்முறை *இங்கே*

சுவையான, சத்தான கம்பு ரொட்டி தயார்!

                                          ******


கருத்துகள்