பருப்பு உருண்டைக் குழம்பு | Urundai Kulambu Recipe in Tamil

மிகவும் சுவையான, புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த பருப்புகள் சேர்த்துத் தயாரிக்கும் உருண்டைக் குழம்பு செய்முறை!



தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 5 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு/ பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2 (சிறியது)
சின்ன வெங்காயம் - 8
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 3 இணுக்கு
புளி - நெல்லிக்காய் அளவு
வத்தல் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 
சாம்பார்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

செய்முறை

* பருப்பு வகைகளைக் கழுவிவிட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊறியபின் அத்துடன் கைப்பிடியளவு கறிவேப்பிலையும், உருண்டைக்குத் தேவையான உப்பும் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துவைக்கவும்.

*அரைத்த பருப்புடன், 2 பச்சை மிளகாய் அல்லது, கொரகொரப்பாகப் பொடித்த 2 சிவப்பு மிளகாய்கள், அரைத் தேக்கரண்டி சோம்பு / பெருஞ்சீரகம் சேர்த்து, சிறு எலுமிச்சை அளவுள்ள உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

* தேங்காயை சீரகத்துடன் சேர்த்து அரைத்தபின் கடைசியாக 6 சின்ன வெங்காயத்தையும் ஒரு சிறிய தக்காளியையும் சேர்த்து அரைத்துவைக்கவும்.

* புளியை ஊற வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, 2 சின்னவெங்காயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்

* அத்துடன் நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், 4 பல் பூண்டு அத்துடன் கடைசியாக 1 தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
 
* தக்காளி நன்கு வதங்கியது, மஞ்சள், வத்தல், மல்லிப்பொடிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* அத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.

* ஐந்து நிமிடம் மூடிவைத்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

*ஊறவைத்த புளியைத் தேவையான தண்ணீருடன் கரைத்துச் சேர்க்கவும்.

* சாம்பார்ப் பொடியையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

* கடைசியாகப் பருப்பு உருண்டைகளைச் சேர்த்து, மிதமான தீயில் எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

* சுவையான பருப்பு உருண்டைக்குழம்பு தயார்!

                                     ******


கருத்துகள்