சுசியம் | பச்சைப்பயறு சுசியம் | Pachai Payaru Susiyam in Tamil


சத்தான முழு பச்சைப்பயறு, வெல்லத்தூள் சேர்த்துச் செய்த சுவையான சுசியம் செய்முறை!

தேவையான பொருட்கள்

வேகவைத்த முழு பச்சை பயறு - 3/4 கப் 
நாட்டுச் சர்க்கரை அல்லது சீனி - 4 டேபிள் ஸ்பூன்
இட்லி மாவு - 1 கப்
ஏலக்காய் - 2 
தேங்காய்த் துருவல் - 1/4  கப் 
உப்பு - ஒரு சிட்டிகை 
அவல் - 1 கைப்பிடி அளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை 

வேகவைத்த பாசிப்பருப்பைக் கரண்டியால் மசித்து வைக்கவும். 

மசித்த பயறுடன், வெல்லத்தூள் அல்லது சீனி, பொடி செய்த ஏலக்காய்,  அவல், சிட்டிகை உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை, எலுமிச்சை அளவுக்கு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

உருண்டைகளை இட்லி மாவில் எல்லாப் புறமும் தோய்த்து எடுத்து, மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இட்லி மாவு இல்லை என்றால், மைதா மாவை உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்து அதில் முக்கி எடுத்தும் சுசியம் செய்யலாம்.

இட்லி மாவில் செய்யும்போது, வெளிப்புறம் நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

சுலபமான மாலை நேரத் தின்பண்டம் தயார்!

                                               ******

கருத்துகள்