முருங்கைக்கீரை அடை | கீரை ஆம்லெட்

சத்தான முருங்கைக் கீரையில் செய்யக்கூடிய சுலபமான பிரேக்ஃபாஸ்ட் செய்முறை. இந்தக் காலை நேர உணவு தயாரிக்க நமக்குப் 10 நிமிடங்களே போதும். 



தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை - 1 கொத்து 
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் 
சின்ன வெங்காயம் -3 அல்லது 4
பச்சை மிளகாய் - 1 
முட்டை - 1
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பச்சை மிளகாயையும் சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
கீரையை உருவியெடுத்து, கழுவித் தயார் செய்யவும்.

சுத்தம் செய்த கீரையுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடி செய்த பொட்டுக்கடலைப் பொடி, 
மிளகு தூள், உப்பு, அத்துடன் ஒரு முட்டை கலந்து கொள்ளவும்.

கலவையை நன்றாக அடித்து தயார் செய்யவும். கலவை கெட்டியாக இருந்தால் இன்னொரு முட்டை அல்லது சிறிதளவு பால் கலந்துகொள்ளலாம்.

தயார் செய்த முட்டைக் கலவையை மிதமான தீயில் அடைகளாக ஊற்றி எடுக்கவும்.

மிகவும் சத்தான காலை உணவு தயார்! 

                                                          ******

கருத்துகள்