மிளகு கஷாயம் | Pepper Kashayam Recipe in Tamil

சளி, இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கான ஏற்ற பாட்டி வைத்தியம். சுலபமான மிளகு கஷாயம் செய்முறை. இந்தக் கஷாயம், ஆஸ்துமா மற்றும் வாய்வுப் பிரச்சனைகளில் நலம் பெறவும் உதவும். 



தேவையான பொருட்கள் 

மிளகு - 1 டீஸ்பூன் 
பொடி செய்த சுக்கு - 1/2 டீஸ்பூன் 
பனங்கல்கண்டு - 3 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 1/2 கப் 

செய்முறை 

இரண்டு பேருக்குத் தேவையான மிளகு கஷாயம் செய்ய, ஒன்றரை கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும் 

மிளகையும், சுக்கையும் கரகரப்பாகப் பொடித்து வைக்கவும்.
 
பொடித்த சுக்கு, மிளகைக் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து, மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் மூடி வைத்துக் கொதிக்க விடவும். 

எடுத்து வைத்திருக்கும் பனங்கற்கண்டு சேர்க்கவும். கூடுதலாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.(பனங்கற்கண்டு இல்லையென்றால், கஷாயத்தை இறக்கிய பிறகு தேன் சேர்த்துக் கலந்துகொள்ளலாம்.)

மேலும் 2 நிமிடங்கள் பனங்கற்கண்டு நன்றாகக் கரையவிட்டு அடுப்பை அணித்துவிடலாம்.

சிறிது ஆறிய பின் வடிகட்டிப் பரிமாறவும்.

                                                           ******

கருத்துகள்