உடனடி போண்டா செய்வது எப்படி | இட்லி மாவு போண்டா

உடனடியாகச் செய்துவிடக்கூடிய மாலை நேரப் பலகாரம்...இட்லி மாவு இருந்தால் உடனே செய்து பாருங்க!

குழந்தைகள் கேட்டு வாங்கிச் சாப்பிடும் கீரை போண்டா செய்முறை, இங்கே!

தேவையான பொருட்கள்

அதிகம் புளிக்காத இட்லி மாவு - 1 கப்
ரவை - 3 டேபிள்ஸ்பூன் 
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்  
வெங்காயம்-1 
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறு துண்டு 
கறிவேப்பிலை - 2 இணுக்கு
வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு



செய்முறை

வெங்காயத்தை மெலிதாக நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாயைச் சிறிதாக நறுக்கவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். 

இட்லி மாவில், எடுத்து வைத்திருக்கும் ரவை, கடலை மாவு, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, வத்தல் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். 

தயாரித்த மாவை, பத்திலிருந்து இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். 

ஊறியபின், மாவைக் கரண்டியால் அல்லது கைகளாலேயே சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். 

இந்த போண்டா, வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.  

மிகவும் சுவையான சுலபமான போண்டா தயார்!

                                                        ******

கருத்துகள்