மிளகு சாம்பார் | பாரம்பரிய சாம்பார் செய்முறை

பாட்டி காலத்துப் பாரம்பரிய மிளகு சாம்பார் செய்முறை...மணமான இந்த சாம்பார், இட்லி, தோசையுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும். 



தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - 1/4 கால் கப் 
தக்காளி (சிறியது) - இரண்டு 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 6 
பூண்டு - 6 பல் 
பச்சை மிளகாய் - 2 

தாளிக்க

எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை

பருப்புடன் வெந்தயம், தக்காளி, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிரெஷர் குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.

புளியை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், கடுகு சீரகம், வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். 

அத்துடன், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், கரைத்த புளித் தண்ணீரையும் உப்பையும் சேர்த்துக் கலந்துவிடவும். 

புளித்தண்ணீர் பச்சை வாசனை போகும் அளவுக்கு 3 நிமிடம் கொதிக்க விடவும்.

மசித்து வைத்த பருப்பு தக்காளி கலவையைச் சேர்க்கவும்.

வாணலியில் அரை டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து, இளம் வறுப்பாக வறுத்துக்கொள்ளவும்.  

வறுத்த பொருட்களைச் சிறிது ஆறிய பின், கொரகொரப்பாகப் பொடித்து சாம்பாரில் கலக்கவும்.

கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். 

மணமான, சுவையான மிளகு சாம்பார் தயார்!

                                                        ******


கருத்துகள்