திருநெல்வேலி தக்காளி ரசம் | Tomato Rasam in Tamil

 


திருநெல்வேலி ஸ்பெஷல் தக்காளி ரசம் செய்முறை...முழுமையான வீடியோ செய்முறை இங்கே...

தேவையான பொருட்கள் 

தக்காளி - 3 

பச்சை மிளகாய் - 1

புளி - நெல்லிக்காய் அளவு

வேகவைத்த துவரம்பருப்பு  - 1 குழிக்கரண்டி 

மிளகு - 1 தேக்கரண்டி 

சீரகம் - 1/2 தேக்கரண்டி 

பூண்டு - 4 பல்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 இணுக்கு

பெருங்காயம் - சிறிதளவு  

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

புளியை நீர் விட்டுக் கரைத்து வைக்கவும்.

மிளகு, சீரகம், பூண்டைச் சேர்த்து, ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

மூன்று தக்காளியையும் நறுக்கி, அதில் உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும். கூடவே, சிறிது கொத்தமல்லி சேர்த்துக் கொண்டால் இன்னும் வாசனையாக இருக்கும்.

வாணலியில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, காய்ந்த மிளகாய் பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.

கடுகு வெடித்த பின், அதில் நாம் தட்டி வைத்திருக்கும் மிளகு சீரகம் பூண்டு கலவையைச் சேர்த்து, சில வினாடிகள் வறுத்து விடவும்.

அத்துடன், நாம் கைகளால் மசித்து வைத்திருக்கும் தக்காளி கலவையை சேர்த்து, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

தக்காளி சிறிது வதங்கியவுடன், அத்துடன் நாம் கரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காயளவு புளித்தண்ணீரைச் சேர்த்து, கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு, புளிப்பு சரிபார்த்து, கூடுதலாகத் தண்ணீர் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

நுரை கூடி வரும் சமயத்தில், ஒரு குழிக்கரண்டி அளவுக்கு வேக வைத்த துவரம்பருப்பைச் சேர்த்துக் கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.

அருமையான தக்காளி ரசம் தயார்!

                                                     ******

கருத்துகள்