முட்டைக்கோஸ் மசாலா | Muttaikose Kootu in Tamil

சப்பாத்தி பூரியுடன் சாப்பிட, சத்தான முட்டைக்கோஸ் கூட்டு. முட்டைக்கோஸுடன், சத்தான பச்சைப்பயறு சேர்த்துச் செய்யும் மசாலா கறி. சப்பாத்திக்கு ஏற்ற, சத்தான கத்திரிக்காய் தால், அது தவிர, கிராமத்து முறை உருளைக்கிழங்கு குருமா செய்முறைகளும் இருக்கிறது. அவற்றையும் பாருங்க.

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 200 கிராம் 
பெரிய வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2 
பச்சைப் பயறு - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு
சீனி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க 

பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 3 
ஏலக்காய் - 1
சிவப்பு மிளகாய் - 3 
கொத்துமல்லி - 1 டீஸ்பூன் 
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன் 


செய்முறை

* முட்டைகோஸை நறுக்கி, இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசி வைக்கவும்.

* பாசிப்பயறை உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.

* வறுக்க வேண்டிய பொருட்களை மிதமான தீயில் வைத்துக் கருகாமல் வறுத்து, ஆறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு, சீரகம் வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம் வதங்கி நிறம் மாறும் சமயத்தில், வெட்டிவைத்த முட்டைகோஸை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வதக்கிய பின், உப்பு, மஞ்சள்தூள், கால் கப் தண்ணீர் கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.

* வெந்த முட்டைகோசுடன், வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, மசாலா வாசனை போகும்வரை, மறுபடியும் ஒரு மூன்று நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.

* கடைசியாக வேகவைத்த பாசிப் பருப்பை மசித்து, முட்டைகோஸில் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.

* பாசிப்பயறுக்கு பதிலாக, பாசிப்பருப்பு சேர்த்தும் இந்தக் கூட்டு செய்யலாம். 

* தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்தபின், கடைசியாக அரை தேக்கரண்டி கரம் மசாலாவும், அரைத் தேக்கரண்டி சர்க்கரையும் கலந்து இறக்கவும். 

* கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான முட்டைக்கோஸ் மசாலா தயார்!

                                                       ******

கருத்துகள்