புதினா தேநீர் | Mint Tea in Tamil


பலமான சாப்பாட்டுக்குப் பின்னரும், பசியில்லாத சமயங்களிலும், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட சமயத்திலும், இந்தத் தேநீர் குடிப்பது மிகவும் நல்லது. 



புதினா டீ செய்யத் தேவையான பொருட்கள்

புதினா - கைப்பிடி அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் 
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு 
மிளகு - 1/4 டீஸ்பூன் 
சர்க்கரை - 3 டீஸ்பூன் (அல்லது) 
தேன் - 3 டீஸ்பூன்

செய்முறை

சுத்தம் செய்த புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒன்றரைக் கப் தண்ணீர் சேர்க்கவும்.

அரை அங்குலத் துண்டு இஞ்சியையும், அரை டீஸ்பூன் மிளகையும் இடித்துச் சேர்க்கவும். 

மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

அடுப்பை அணைத்த பின் சில நிமிடங்கள் தேநீரை மூடி வைத்துவிட்டு, பின்னர் வடிகட்டி, சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம்.

இந்த அளவு தேநீரை இருவர் பருகலாம்.

இந்தத் தேநீர், தொண்டைக்கு மிகவும் இதமாகவும், பசியைத் தூண்டுவதாகவும் இருக்கும்.

                                                         ****** 

கருத்துகள்