குழம்பு ஆம்லெட் | Omelette Recipe in Tamil

ரோட்டோரக் கடைகளில் செய்யப்படுகிற சுவையான குழம்பு ஆம்லெட் செய்முறை. இந்த ஆம்லெட்டில், மட்டன் குழம்பு அல்லது சிக்கன் குழம்பு சேர்த்துச் செய்யலாம்.

ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள்

முட்டை - 2
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மட்டன் குழம்பு -
(எலும்பில்லாத
சிறுசிறு துண்டுகளுடன்) - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை

பாதி வெங்காயத்தையும்  பச்சை மிளகாயையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குழம்பில் உள்ள மட்டன் துண்டுகளை, சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைக்கவும்.

முட்டையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எடுத்து வைத்துள்ள மட்டன் குழம்பு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக அடித்துக் கொள்ளவும்.

தீயை மிதமாக வைத்து, தோசைக்கல்லில் ஆம்லெட்களாக ஊற்றி எடுக்கவும். 

சுவையான, மட்டன் குழம்பு வாசனையுடன் ஆம்லெட் தயார்!

                                                    ******

கருத்துகள்