சிவப்பரிசி சாம்பார் சாதம் | Sambar Sadam in Tamil

சத்தான சிவப்பு சம்பா அரிசியில் ( மட்டா அரிசி) செய்த சாம்பார் சாதம் செய்முறை. இதே செய்முறையில், வெள்ளை அரிசியிலும் சாம்பார் சாதம் செய்யலாம்.


தேவையான பொருட்கள்

அரிசி - 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 6 பல்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கத்தரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார்ப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சுவப்பு மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை

*அரிசி பருப்பைக் கழுவி, 3 கப் தண்ணீர் சேர்த்து, அரைமணி நேரத்திலிருந்து முக்கால் மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  
* வெங்காயம் பூண்டைத் தோலுரித்து வைக்கவும்.

* காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.

*புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* ஊறிய அரிசி பருப்பைக் குக்கரில் 5 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும். 

* வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். 

* கடுகு வெடித்த பின், வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். 

* வதங்கிய காய்கறிகளுடன் தண்ணீர், மஞ்சள்ப்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். 

* காய்கறிகள் வெந்தபின், புளித் தண்ணீரைச் சேர்த்து, அத்துடன் வத்தல், மல்லிப்பொடிகளையும் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும்.

* அத்துடன், சாம்பார்ப்பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். 

* உப்பு சரிபார்க்கவும். கூடுதலாக 1/4 தேக்கரண்டி சீனி சேர்க்கவும். 

* குழம்புக் கலவையுடன், மசித்த அரிசி பருப்புக் கலவையைச் சேர்த்து, அத்துடன் ஒன்றரை தேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* சத்தான, சுவையான சிவப்பு அரிசி சாம்பார் சாதம் தயார்!



******

கருத்துகள்