பிரெட் ஆம்லெட் செய்முறை | Bread Omelette Recipe

 வீட்டில் பிரெட் இருந்தால் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய சுலபமான காலை உணவு இந்த பிரெட் ஆம்லெட்.


இதற்குத் தேவையான பொருட்கள்

முட்டை - 1

பிரெட் - 2 துண்டுகள்

நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

முட்டையுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, முட்டைக் கலவையை ஊற்றவும். முட்டைக் கலவை ஒரு நிமிடம் மிதமான தீயில் வெந்த பிறகு, அதன்மேல் ஒரு பிரெட் துண்டை வைக்கவும்.



சில விநாடிகள் கழித்துத் திருப்பி விடவும். குறைவான தீயில், முட்டை வெந்து, பிரெட் துண்டு நன்கு சிவந்த பிறகு எடுத்து விடவும். 




அதே தோசைக்கல்லில், மற்றொரு பிரட் துண்டை, சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து நன்கு சிவக்கவிட்டு, அதை ஆம்லெட்டின் மறுபுறம் வைத்துப் பரிமாறவும்.



மிகவும் சுவையான பிரெட் ஆம்லெட் தயார்!

                                                    ***********

கருத்துகள்