நாட்டுத் தக்காளிக் கூட்டு | தக்காளி சாலட்


இது, அடுப்பிலேற்ற அவசியமில்லாத அவசரக் கூட்டு. இரவு உணவுக்கும் சட்டென்று கூட்டுவைக்க நேரமில்லாதபோதும் செய்யக்கூடியது, பருப்புக்குழம்பு, மற்றும் சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற, தக்காளித் தொக்கு செய்முறையையும் பாருங்கள்

தேவையான பொருட்கள்...

நாட்டுத்தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 20

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை

தக்காளியை மெலிதாக நறுக்கிக்கோங்க.

சின்ன வெங்காயத்தையும் மெலிதாக நீளவாக்கில் அரிந்து வச்சுக்கோங்க.

கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடுங்க.

சீரகத்தை உள்ளங்கையில் வைத்து சிறிது நசுக்கிப் போடுங்க.

தேவையான உப்புப்போட்டுக் குலுக்கி ஐந்து நிமிடம் வைத்துவிட்டு, குழம்பு சாதத்துடன்  பரிமாறுங்க.

**************

கருத்துகள்