மட்டன் மிளகு கறி | Mutton Pepper Masala in Tamil

மிக மிக சுவையான மட்டன் மிளகு கறி செய்முறை. இது, சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டாவுடனும் சேர்த்துச் சாப்பிட ஏற்றது. 


பாரம்பரிய முறையில் வறுத்து அரைத்த மசாலாவுடன் சமைத்த கறி பிரட்டல் அல்லது மட்டன் சுக்கா செய்முறையையும் பாருங்க.

தேவையான பொருட்கள்

மட்டன் 200 கிராம் 
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி - 1அங்குலம் 
பூண்டு - 6 பல்
வத்தல் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 அங்குலத் துண்டு
கிராம்பு - 3
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

மட்டனுடன் ஊறவைக்க...

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

மட்டனுடன், ஊறவைப்பதற்குரிய மஞ்சள் தூள், வத்தல் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.


ஊறவைத்த மட்டன் துண்டுகளுடன், வெட்டி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி அத்துடன், கால் கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.


வாணலியில், மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். 

அத்துடன் வேக வைத்த மட்டன் கலவையைச் சேர்க்கவும். கூடவே, 2 டீஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் வத்தல் தூள் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து விடவும்.

 

சேர்த்த மசாலாக்களின் பச்சை வாசனை போகும் அளவுக்கு 6 முதல் 8 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

கடைசியாக, ஒரு டீஸ்பூன் மிளகை, கொரகொரப்பாகப் பொடி செய்து மட்டனுடன் சேர்த்து, கூடவே இரண்டு இணுக்கு கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.


மேலும் மூன்று நிமிடங்கள் சிறு தீயில் வற்றவைத்து இறக்கவும்.


மிக மிக சுவையான மட்டன் மிளகு கறி தயார்! 

                                                    ******

கருத்துகள்