ஓட்ஸ் பணியாரம் | Oats Paniyaram Recipe in Tamil

நார்ச்சத்தும் நல்ல பல சத்துக்களும் நிறைந்த, சுலபமான ஓட்ஸ் குழிப்பணியாரம். குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் விரும்பும் இனிப்பான மாலை நேரப் பலகாரம்.

மொறுமொறு வெங்காய பக்கோடா செய்முறையும் 👈இங்கே  


தேவையான பொருட்கள் 

ஓட்ஸ் - 1/2 கப் 

கோதுமை மாவு - 1/4 கப்

அரிசி மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்

சீனி - 5 டேபிள்ஸ்பூன்

பாதாம் பருப்புத் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி - 1/4 டீஸ்பூன்

சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

பொரிக்க - நெய் அல்லது எண்ணெய்

செய்முறை 

ஓட்ஸுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, சிட்டிகை உப்பும் சேர்த்து, தண்ணீர் சேர்த்து, கெட்டியான, இட்லி மாவு பதத்தில் கலந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.


ஊற வைத்த ஓட்ஸ் கலவையில், சீனி, சோடா உப்பு, ஏலக்காய்ப் பொடி மற்றும் பாதாம் துண்டுகளைச் சேர்க்கவும்.

குழிப்பணியாரக் கல்லில், ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, ஓட்ஸ் மாவுக் கலவையை ஊற்றி, இரு புறமும் பொன்னிறமாக வேகவிடவும்.


நெய் சேர்த்துச் செய்தால், சுவை மிக அருமையாக இருக்கும். சுவையான மாலை நேரத் தின்பண்டம் தயார்! 

முழுமையான வீடியோ செய்முறை...இங்கே!

                                                              ***

கருத்துகள்