வெங்காய பக்கோடா | ஆனியன் பக்கோடா | Onion Pakoda in Tamil

 


கடைகளில் செய்த மாதிரி, அருமையான மொறு மொறு வெங்காய பக்கோடா வீட்டிலேயே செய்யும் முறை...

இனிப்பான, ஓட்ஸ் பணியாரம் செய்முறையையும், உடனடி கோதுமை போண்டா செய்முறையையும் நீங்கள் நம் வலைப்பக்கத்தில் இங்கே 👆👆👆 பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

கடலை மாவு - 1 கப் 

அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன் 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 2 

வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன் 

நறுக்கிய கறிவேப்பிலை - 1 டேபிள்ஸ்பூன் 

நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன் 

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் 

சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் 

சூடாக்கிய எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - பொரிப்பதற்கு 

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 

வெங்காயம், பச்சை மிளகாயை மெலிதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய்த்தூள், பெருங்காயம், சோடா உப்பு, சூடாக்கிய எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் கையால் நன்கு பிசைந்துகொள்ளவும்.

வெங்காயத்திலிருக்கும் ஈரப்பதத்திலேயே, எடுத்து வைத்திருக்கும் கடலை மாவு, அரிசி மாவைச் சேர்த்து, நன்றாகப் பிரட்டி விடவும்.

மிகக் குறைந்த அளவு தண்ணீர் தெளித்து, மாவை கெட்டியாகத் திரட்டிக் கொள்ளவும். 

ஒரு கையளவு மாவை எடுத்து, சூடான எண்ணெயில் சிறு சிறு துண்டுகளாக உதிர்த்து விடவும். 

பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

கடைகளில் வாங்குவது போன்ற, மொறுமொறுப்பான வெங்காய பக்கோடா தயார்!

                                                   *****

கருத்துகள்