கோதுமை மாவு போண்டா | Wheat Flour Bonda in Tamil

உடனடியாகச் செய்யக்கூடிய கோதுமை மாவு போண்டா செய்முறை. கேரட் சேர்த்துச் செய்திருக்கும் இந்த போண்டாவை, கேரட் சேர்க்காமல் வெங்காயம் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்துக்கூடச் செய்யலாம். முழுமையான வீடியோ செய்முறை இங்கே...

மொறு மொறு வெங்காய பக்கோடா செய்முறை, மற்றும் சத்தான கொண்டைக்கடலை வடை செய்முறையையும் பாருங்க.


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப் 

ஓட்ஸ் - 1/4கப்

சீரகம் - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன் 

சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்  

நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் 

கேரட் துருவல் - 1/4 கப் 

பச்சை மிளகாய் (நறுக்கியது) -1 

கொத்தமல்லி (நறுக்கியது) - 1/4 கப் 

கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை 

கோதுமை மாவுடன் ஓட்ஸ், சோடா உப்பு, சீரகம், மஞ்சள் தூள், வத்தல் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.

மாவுக் கலவையில், நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். 




உப்பு சரி பார்க்கவும். 

கலந்து வைத்த மாவை, கையாலோ அல்லது கரண்டியாலோ எண்ணெயில் சேர்த்து, மிதமான தீயில், சிறுசிறு போண்டாக்களாகப் பொரித்தெடுக்கவும். 

சுலபமான மாலை நேரத் தின்பண்டம் தயார்!

*****

கருத்துகள்