கொண்டைக்கடலை வடை | Vadai Recipe in Tamil

மாலைத் தேனீருக்கு ஏற்ற, சத்தான கறுப்புக் கொண்டைக்கடலையில் செய்த வடை. 



முழுமையான வீடியோ செய்முறை கீழே 👇👇👇



இனிப்பான ஓட்ஸ் பணியாரம் செய்முறைகளையும் பாருங்க.

கொண்டைக்கடலை வடை செய்யத் தேவையான பொருட்கள்

ஊற வைத்த கொண்டைக்கடலை - 1 கப் 
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 1 
புதினா இலைகள் - 10 
கறிவேப்பிலை - 1 இணுக்கு 
சோம்பு/பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

* வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கவும்.

* நறுக்கிய வெங்காயத்தை இரண்டாகப் பிரித்துவைக்கவும்.

* ஊறவைத்த கடலையுடன், பாதி வெங்காயம், புதினா, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த கலவையுடன், மீதி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

* எண்ணெய் காய்ந்ததும், மிதமான சூட்டில் வடைகளாகப் பொரித்து எடுக்கவும்.

* சுலபமான செய்முறையில் சத்தான வடை தயார்!

                                                   ******

கருத்துகள்