பூசணிக்காய் எரிசேரி | Poosanikai Kootu in Tamil

இது கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கூட்டு வகை. இந்தக் கூட்டில், பூசணிக்காயுடன் தட்டைப்பயறு சேர்த்துச் சமைப்பார்கள். இது, மிகவும் சுலபமான, சுவையான கூட்டு செய்முறை. இந்தக் கூட்டு சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சாப்பிட ஏற்றது. சப்பாத்திக்கு ஏற்ற கத்திரிக்காய் பருப்பு செய்முறையையும் பாருங்க.

 


தேவையான பொருட்கள் 

தட்டைப்பயறு - 1/4 கப் 

பூசணிக்காய் - 400 கிராம் 

தேங்காய்த்துருவல் - 1/4 கப் 

சீரகம் - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் -1 சிட்டிகை 

வத்தல் தூள் - 1/2 டீஸ்பூன் 

சீனி - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

தாளிக்க... 

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் 

கடுகு - 1/2  டீஸ்பூன் 

சிவப்பு மிளகாய் - 3 

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 இணுக்கு 

செய்முறை 

பூசணிக்காயைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


தட்டைப்பயறை மூன்று நிமிடங்கள் வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து, 2 அல்லது 3 விசில் வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.

தேங்காயைச் சீரகத்துடன் சேர்த்து அரைத்து வைக்கவும். 


வாணலியில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன், வெட்டிவைத்த பூசணிக்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும்.

பூசணிக்காயுடன், மஞ்சள்தூள் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து, மூன்று நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும்.

பூசணிக்காய் பாதி வெந்த பிறகு, அத்துடன் உப்பு, வத்தல் தூள், அரைத்த தேங்காய் விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து, பச்சை வாசனை போகும் அளவுக்கு மேலும் 3 நிமிடங்கள் வேகவிடவும்.


பூசணிக்காய் நன்கு வெந்தபின், அத்துடன் வேகவைத்த தட்டைப்பயறு சேர்க்கவும்.

உப்பு சரி பார்த்து விட்டு, கூடவே அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலந்துவிடவும்.

மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

மிகவும் சுவையான பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு தயார்!

                                                         ******

கருத்துகள்