பாரம்பரிய கருப்பட்டிக் கூழ் | அரிசி மாவு கூழ்


பாரம்பரிய முறையில், கோயில்களில் தயாரிப்பதுபோல், குடிக்கும் பக்குவத்தில் கூழ் தயாரிக்கும் செய்முறை. இது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்து அம்மன் கோயில்களில் தயாரிக்கும் செய்முறை. கருப்பட்டியில் கால்ஷியம் சத்து அதிகமென்பதால் அதனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கோள்வது நல்லது.

மேலும், 
ஓட்ஸ் பணியாரம் மற்றும், உடனடி போண்டா  செய்முறைகளையும் நம் வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 6 டேபிள் ஸ்பூன்

கருப்பட்டி - 300 கிராம்

துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 

சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் 

ஏலக்காய் - 2 அல்லது 3 சுக்கு 

செய்முறை

கருப்பட்டியை ஒரு கப் நீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரையவிடவும். தட்டி வைத்த சுக்கு, ஏலக்காயைக் கருப்பட்டிக் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

அரிசி மாவைச் சிறிது சிறிதாக நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அத்துடன், ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கட்டிகளில்லாமல் கரைத்து எடுக்கவும். 

அடி கனமான பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீருடன் கரைத்த கருப்பட்டிக் கலவையை வடிகட்டிச் சேர்க்கவும். 

துருவி வைத்த தேங்காயை கருப்பட்டிக் கலவையில் சேர்க்கவும்.

கொதித்தவுடன், தீயைக் குறைத்துவிட்டு, கரைத்து வைத்துள்ள அரிசி மாவுக் கலவையைச் சேர்க்கவும். கட்டிகள் விழாமல் கலந்துவிடவும். 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும்.

சூடு ஆறியதும், கூழ் கெட்டியாகி குடிக்கும் பதத்தில் தயாராக இருக்கும். கெட்டியாகத் தயாரிக்க வேண்டுமென்றால் தண்ணீரைக் குறைவாகச் சேர்த்துத் தயாரிக்கவும்.

மிகவும் சுவையான, கருப்பட்டிக்கூழ் தயார்!

முழுமையான வீடியோ செய்முறை 👇👇👇

கருப்பட்டிக் கூழ் செய்முறை

                                                    ******

கருத்துகள்