ரவை பணியாரம் | Rava Paniyaram in Tamil

மைதா மற்றும் சீனி சேர்க்காத சுலபமான மாலை நேரப் பலகாரம். 15 நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய ரவை இனிப்புப் பணியாரம். இந்த செய்முறையில், வெல்லத்துக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்தும் தயாரிக்கலாம். 

மேலும், சத்தான

ஓட்ஸ் பணியாரம்

எள்ளுருண்டை செய்முறைகளையும் நீங்கள் பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்

ரவை - 1 கப் 

பொடி செய்த வெல்லம் - 1/2 கப். 

நன்கு பழுத்த வாழைப்பழம் - 1

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1/4 கால் டீஸ்பூன் 

எள் - 2 டீஸ்பூன் 

சோடா உப்பு (விருப்பப்பட்டால்) - 1/4 கால் டீஸ்பூன் 

தண்ணீர் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - 2 சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை 

ரவை, வெல்லம், 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அத்துடன் வாழைப்பழத்தையும் நறுக்கிச்  சேர்க்கவும்.


1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.




அரைத்த மாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். மாவு கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். அத்துடன், சுக்குப்பொடி, ஏலக்காய்ப்பொடி, எள், மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். 


வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றி, மிதமான தீயில் வேக விடவும். ஒரு புறம் நன்கு சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு வேகவிடவும். இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்துவிடலாம்.




இதே மாவை குழிப்பணியாரக் கல்லில் ஊற்றியும் பணியாரங்கள் தயாரிக்கலாம்.


மிகவும் சுலபமான, இனிப்பான ரவைப் பணியாரம் தயார்!

********

கருத்துகள்